Home நாடு “சாஹிட் வங்கிக் கணக்கில் எப்படி வந்தது 230 மில்லியன்?” மகாதீர் கேள்வி!

“சாஹிட் வங்கிக் கணக்கில் எப்படி வந்தது 230 மில்லியன்?” மகாதீர் கேள்வி!

880
0
SHARE
Ad

mahathir-zahid-comboகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியை நோக்கி மற்றொரு கேள்வியை மகாதீர் முன்வைத்துள்ளார்.

சாஹிட்டும் மலாய் வம்சாவளியைச் சேர்ந்தவரல்ல எனச் சுட்டிக் காட்டியுள்ள மகாதீர், தான் பிரதமராக இருந்த கால கட்டத்தில் அம்னோ இளைஞர் பகுதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், 1996-ஆம் ஆண்டில் சாஹிட் சமர்ப்பித்த அவரது சொத்து விவரங்களில் அவரது வங்கிக் கணக்கில் 230 மில்லியன் இருந்ததாகவும் அந்தப் பணம் எப்படி வந்தது எனக் கேட்கப்பட்டதற்கு அதற்குரிய முறையான விளக்கத்தை சாஹிட்டால் தர இயலவில்லை எனவும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

இப்போது அவருக்கு ஞாபகம் இருக்குமானால், அத்தகைய பெரிய தொகை கொண்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதை சாஹிட் ஹாமிடி தெரிவிக்கட்டும் எனவும் மகாதீர் கேள்விக் கணை தொடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டதும், நஜிப்பை பதவியிலிருந்து அகற்றுவதற்கு தனது ஆதரவை சாஹிட் நாடியதாகவும் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

மகாதீர் இந்தியர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற தகவலை சாஹிட் வெளியிட்டது முதல் சாஹிட் மீது தொடர்ந்து எதிர்த் தாக்குதல்களை மகாதீர் நடத்தி வருகிறார்.