Home நாடு ஆசியான் 50-ம் ஆண்டுக் கொண்டாட்டம்: நஜிப் மகிழ்ச்சி!

ஆசியான் 50-ம் ஆண்டுக் கொண்டாட்டம்: நஜிப் மகிழ்ச்சி!

530
0
SHARE
Ad

50thAseandayகோலாலம்பூர் – ஆசியானின் 50-வது ஆண்டுக் கொண்டாட்டம் இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் சூர்யா கேஎல்சிசியில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உட்பட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க நடைபெற்றது.

50thAseanday2பிரதமர் நஜிப் உரையாற்றுகையில், “ஆசியான் கொள்கைகள் அதனைச் சார்ந்திருக்கும் நாடுகளுக்கும், வளர்ந்து வரும் நாடுகளுக்கும் மிகச் சரியாகப் பொருந்தி, நிலைப்புத்தன்மையையும், செழிப்பையும் தருகின்றது. ஆசியான் நாடுகள் தங்களுக்குள் நட்பை வளர்த்துக் கொள்வதோடு, முடிவெடுப்பதில் ஒற்றுமையையும், பிற நாடுகளின் இறையாண்மையையும் காப்பாற்ற முடிகின்றது. ஆசியான் நாடுகளாக நாம் ஒன்றுபடும் அதேவேளையில், அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை” என்று நஜிப் தெரிவித்தார்.

50thAseanday1

#TamilSchoolmychoice

இவ்விழாவில் நஜிப்புடன், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி, வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனீபா அம்மான், அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.