Home வணிகம்/தொழில் நுட்பம் குரல் வழித் தமிழ் உள்ளீடு : கேள்விகளும் பதில்களும்

குரல் வழித் தமிழ் உள்ளீடு : கேள்விகளும் பதில்களும்

1298
0
SHARE
Ad

sellinam-promo-1024x500குரல் வழித் தமிழ் உள்ளிடு முறையை அண்மையில் கூகுள் வெளியிட்டது. அதனை, செல்லினம் வழியாகவும் பெறலாம் என்பதை, முந்தையக் கட்டுரையில் கூறி இருந்தோம். கட்டுரையைப் படித்த பலர், மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், சில கேள்விகள் எங்களுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்ற எண்ணத்தில், சிலவற்றுக்கு இங்கே பதில் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

1. என்னுடைய திறன்பேசியில் ஒலிவாங்கி (microphone) தோன்றவில்லை. ஏன்?

இதற்கு நீங்கள் ‘கூகுள்’ (Google) செயலியைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். தரவிறக்கம் செய்தவுடன், விசைப்பலகையின்மேல் ஒலிவாங்கி தோன்றும்.

#TamilSchoolmychoice

sellinam-GoogleApp

2. இந்தச் சேவை ஆண்டிராய்டுக்கு மட்டும் தானா? ஐ.ஓ.எசுக்கு எப்போது கிடைக்கும்?

இந்தச் சேவை கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அவர்கள் வெளியிட்டிருக்கும் இயங்குதளங்களில் மட்டுமே கிடைக்கும். ஐ.ஓ.எசுக்கு ஆப்பிள் நிறுவனம் வெளியிட வேண்டும். “வருமா?, வந்தால் எப்போது வரும்?” போன்றக் கேள்விகளுக்கு அவர்களே பதில் சொல்லவேண்டும். அவர்களின் கருத்துரைப் பக்கத்தில் நமது தேவையைத் தெரிவிக்கலாம். கூகுள் வழங்கி இருக்கும் வசதியை எடுத்தும் காட்டலாம்.

3. குரல் வழித் தமிழ் உள்ளிடும்போது, எழுத்துகள் ஆங்கிலத்திலேயே வருகின்றன.

எடுத்துக் காட்டாக ‘வணக்கம்’ என்று குரல் வழிச் சொன்னால், ‘vanakkam’ என்று ஆங்கிலத்தில்தான் வருகிறது. ஏன் தமிழில் வரவில்லை?

ப: இதற்கு நீங்கள் தமிழ் மொழியை உள்ளீட்டு மொழியாகச் சேர்க்கவேண்டும். எப்படிச் சேர்ப்பது என்பதை முந்தைய கட்டுரையில் கூறி இருந்தோம். மேலும் விளக்கத்தை நண்பர் சிவ தினகரனின் காணொளிப் பதிவில் காணலாம். இதன் யூடியூப் இணைப்பு

4. என்னுடைய திறன்பேசியில் தமிழ் எழுத்துகளே தோன்றவில்லை. ஏன்?

இதற்கும் குரல் வழி தமிழ் உள்ளீட்டிற்கும் தொடர்பே இல்லை. முதலில் உங்கள் திறன்பேசியில் தமிழ் எழுத்துகள் தோன்றவேண்டும். செல்லினம் தமிழ் எழுத்துருவைச் சேர்க்காது. ஆண்டிராய்டு அதனை அனுமதிப்பதில்லை. உங்கள் திறன்பேசியை உருவாக்கிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தமிழ் எழுத்துகள் வேண்டும் என்று கேட்பதே சிறப்பு. புதிதாக வாங்குவோர், தமிழ் எழுத்துகள் தோன்றுகின்றனவா என்பதை உறுதி செய்தபின் திறன்பேசிகளை வாங்குவதே சிறப்பாகும்.

நன்றி: செல்லினம்