Home உலகம் ரோஹின்யா பெண்கள் பாலியல் வன்புணர்வு: மியன்மார் இராணுவம் மறுப்பு!

ரோஹின்யா பெண்கள் பாலியல் வன்புணர்வு: மியன்மார் இராணுவம் மறுப்பு!

1071
0
SHARE
Ad

Rohingyaயாங்கூன் – மியன்மார் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் ரோஹின்யா பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் கோலோனெல் போன் டிண்ட் மறுத்திருக்கிறார்.

“யாராவது அவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்வார்களா? எங்கே ஆதாரம்? குற்றச்சாட்டுகளைக் கூறும் பெண்களைப் பாருங்கள்- அவர்களை யாராவது பாலியல் வன்புணர்வு செய்வார்களா?” என்று பிபிசி செய்தி நிறுவனத்திடம் போன் டிண்ட் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில், மனித உரிமை ஆணையம் பெற்ற புகார்களில் ரோஹின்யா பெண்களும், பருவ வயதைச் சேர்ந்த சிறுமிகளும் இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

அதனையடுத்து, மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணையில், ரோஹின்யா அதிகம் வசிக்கும் மாங்டா பகுதியைச் சேர்ந்த 9 கிராமங்களில், மியன்மார் இராணுவத்தினர் புகுந்து துப்பாக்கி முனையில் பெண்களையும், சிறுமிகளையும் தனித்தனியாகவும், கும்பலாகவும் சேர்ந்து பாலியல் வன்புணர்வு புரிந்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறது.

இச்சம்பவங்கள் கடந்த 2016-ம் ஆண்டின் இறுதியில் நடந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அனைத்துலக அளவில் மியன்மாருக்கு நெருக்கடி அதிகரிக்கவே, பாதுகாப்பு ஆணையம் இன்று புதன்கிழமை, மியன்மார் மக்கள் தலைவர் ஆங் சான் சுகியைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்தாலோசிக்கவிருக்கிறது.