Home நாடு கெடா சுல்தான் மறைவுக்கு டாக்டர் சுப்ரா நேரில் அனுதாபம்!

கெடா சுல்தான் மறைவுக்கு டாக்டர் சுப்ரா நேரில் அனுதாபம்!

1003
0
SHARE
Ad

sultan-kedah-subra-condolence-12092017 (2)அலோர் ஸ்டார் – கடந்த திங்கட்கிழமை (11 செப்டம்பர் 2017) காலமான மேன்மை தங்கிய கெடா சுல்தான் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா அவர்களின் மறைவை முன்னிட்டு அலோர்ஸ்டாரில் உள்ள கெடா அரண்மனைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வருகை தந்த டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், கெடா சுல்தான் துணைவியாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Drsubrapayslastrespecttokedahsultan2டாக்டர் சுப்ராவுடன் மஇகா கெடா மாநிலத் தலைவர் செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங், கெடா மாநிலத் துணைத் தலைவர் செனட்டர் டத்தோ எஸ்.ஆனந்தன் உள்ளிட்ட மஇகா குழுவினரும் கெடா சுல்தான் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க உடன் சென்றனர்.

Drsubrapayslastrespecttokedahsultanகெடா சுல்தான் மறைவை முன்னிட்டு வெளியிட்ட அனுதாபச் செய்தியில் கெடா சுல்தான் அனைத்து மலேசியர்களின் அன்பையும், ஈர்ப்பையும் பெற்றவர் என்பதால், அவரது மறைவுக்காக நாடு முழுமையிலும் உள்ள மலேசியர்கள் அனுதாபங்களும், அஞ்சலிகளும் தெரிவித்து வருகின்றனர் என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

Drsubrapayslastrespecttokedahsultan1மாநில சுல்தான்களில் இருமுறை மாமன்னராகப் பதவி வகிக்கும் கௌரவத்தையும், பெருமையையும் பெற்றவர் கெடா சுல்தான் என்றும் டாக்டர் சுப்ரா புகழாரம் சூட்டினார்.

மாமன்னராக இரண்டு தவணைகள் பதவி வகித்த காலகட்டத்தில் மாமன்னருக்குரிய தனது அதிகாரத்துவக் கடமைகளை மரியாதையோடும், பொறுப்போடும், கண்ணியத்தோடும், கெடா சுல்தான் நிறைவேற்றினார் என்பதையும், டாக்டர் சுப்ரா தனது அனுதாபச் செய்தியில் நினைவு கூர்ந்தார்.

செய்தி, படங்கள்: டாக்டர் சுப்ரா.கோம்