Home Video ஆப்பிளின் புதிய தயாரிப்பான ‘ஐபோன் எக்ஸ்’ வெளியீடு!

ஆப்பிளின் புதிய தயாரிப்பான ‘ஐபோன் எக்ஸ்’ வெளியீடு!

1304
0
SHARE
Ad

Iphone-x-tech-1குப்பெர்டினோ (கலிபோர்னியா) – ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புத் திறன்பேசியான ‘ஐபோன் எக்ஸ்’-ஐ நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் தனது முதல் திறன்பேசியை ஆப்பிள் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபோன் எக்ஸ் கண்ணாடியால் ஆனதோடு, அதனைப் பாதுகாக்க எஃகு தகட்டால் ஆன வெளிப்புற அமைப்பும் உள்ளது.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, வயர்லெஸ் சார்ஜிங், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், இன்பிராரெட் கேமரா உள்ளிட்ட புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவில் இதன் விலை 999 டாலர்கள் ஆகும்.

மேலும், அதே விழாவில், தனது ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் போன்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கிறது.

அவை அதன் முந்தைய தயாரிப்பான ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் போன்களில் இருந்து சில மாறுதல்களோடு வெளிவந்திருக்கின்றன.

மேற்ச்சொன்ன மூன்று இரக திறன்பேசிகளிலுமே வயர்லெஸ் சார்ஜிங் வசதி முக்கியச் சிறப்பம்சமாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் குக் நேற்று செவ்வாய்க்கிழமை இம்மூன்று திறன்பேசிகளோடு, ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரம் 3-ம் வரிசையையும் அறிமுகம் செய்து வைத்தார்.

ஐபோன் எக்ஸ் திறன்பேசியின் தொழில்நுட்ப வசதிகளை காணொளி வடிவில் காணலாம் இந்த இணைப்பைச் சொடுக்கவும்: