Home உலகம் சிங்கப்பூரில் எண்ணெய் கப்பல், படகு மோதல் – 5 பேர் மாயம்!

சிங்கப்பூரில் எண்ணெய் கப்பல், படகு மோதல் – 5 பேர் மாயம்!

871
0
SHARE
Ad

Singaporeshipcollidedசிங்கப்பூர் – இன்று புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில், சிங்கப்பூர் புலாவ் சினாங் கடல் பகுதியில் இந்தோனிசியாவைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான கார்த்திகா செகாராவும், டோமினிக்கில் பதிவு செய்யப்பட்ட டிரெட்ஜெர் ஜெபிபி டே ரோங் 19 என்ற படகும் மோதிக் கொண்டன.

இதில் படகில் இருந்த ஒரு மலேசியர் உட்பட 12 பணியாளர்கள் கடலில் மூழ்கினர்.

இந்நிலையில், அவர்களில் 7 பேர், சிங்கப்பூர் கடற்படை வீரர்களால் மீட்கப்பட்டு, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இன்னும் 5 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

கடந்த மாதம், அமெரிக்கப் போர்க்கப்பலான ஜோன் எஸ் மெக்கெயினும், எண்ணெய்க் கப்பல் ஒன்று மோதிக் கொண்டதில், போர்க்கப்பலில் இருந்து 10 வீரர்கள் கடலில் மூழ்கிப் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.