Home கலை உலகம் 40 படங்கள் பாதிப்பு: ஒருவழியாக முடிவுக்கு வந்த பெப்சி போராட்டம்!

40 படங்கள் பாதிப்பு: ஒருவழியாக முடிவுக்கு வந்த பெப்சி போராட்டம்!

993
0
SHARE
Ad

NTLRG_20170913095424599937சென்னை – கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த தென்னிந்திய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை இன்று புதன்கிழமை கைவிடுவதாக அறிவித்திருக்கின்றனர்.

‘பில்லா பாண்டி’ என்ற படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வந்த போது, சம்பள விவகாரம் காரணமாக தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் படப்பிடிப்பை நிறுத்தியது.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சங்கம், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் 40 படங்கள் பாதிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சில ஒப்பந்தங்கள் போடப்பட்டு சுமூகப் புரிந்துணர்வு ஏற்பட்டதையடுத்து பெப்சி தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறது.