கோலாலம்பூர் – ஜோங் நம் கொலை வழக்கு விசாரணை, இன்று திங்கட்கிழமை ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில், இக்கொலையைச் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட இரு பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் அவர்கள் மீதான கொலைக் குற்றப்பத்திரிக்கை அவர்களின் தாய்மொழியில் வாசித்துக் காட்டப்பட்டது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகமது இஸ்கண்டார் அகமது அதனை வாசித்துக் காண்பித்தார்.
இந்நிலையில், இரு பெண்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், உண்மையான குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இவ்விரு பெண்களும் கொலைப் பழியைச் சுமந்து நிற்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் நடைபெற்ற விசாரணையில் அந்த இரு பெண்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.