Home நாடு ஜோங் நம்மின் உறுப்புகள் சேதம் – விசாரணையில் தகவல்!

ஜோங் நம்மின் உறுப்புகள் சேதம் – விசாரணையில் தகவல்!

951
0
SHARE
Ad

kimjongnamகோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் மலேசிய விமானத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

கிம் ஜோங் நம்மைக் கொலை செய்ததாக இரு பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இதனிடையே, இவ்வழக்கு விசாரணையில், முகத்தில் இரசாயனம் தேய்க்கப்பட்ட பின்னர், ஜோங் நம்மின் உடல் உறுப்புகள் மிகவேகமாக சேதமடைந்ததாக நோயியல் நிபுணரின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஜோங் நம்மின் நுரையீரல், மூளை ஆகியவை இரசாயனம் காரணமாக வீங்கியிருக்கிறது என்று பிரேதப்பரிசோதனை நடத்திய முகமட் ஷா மாஹ்முட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.