Home நாடு “தொகுதிகள் மாறலாம் – எண்ணிக்கை மாறாது” டாக்டர் சுப்ரா உறுதி

“தொகுதிகள் மாறலாம் – எண்ணிக்கை மாறாது” டாக்டர் சுப்ரா உறுதி

724
0
SHARE
Ad

mic-cwc-06102017 (2)கோலாலம்பூர் – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் அரசியல் காரணங்களுக்காக மஇகாவின் தொகுதிகள் மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கிடையே சுமுகமாக பரிமாற்றம் செய்யப்படும் சாத்தியம் உண்டு எனவும் ஆனால் எந்த வகையிலும் 9 நாடாளுமன்றத் தொகுதிகள், 19 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் மஇகாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனவும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் அறிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ரா இவ்வாறு தெரிவித்தார்.

mic-cwc-06102017 (1)“தேசிய முன்னணியின் ஓர் உறுப்பியக் கட்சி வழக்கமாகப் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர் இதில் மாற்றங்கள் ஏற்பட்டால் பாரம்பரியமாக பின்பற்றப்படும் நடைமுறைகள் மீது பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஆனால், தொகுதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவது என்பது தேசிய முன்னணிக் கட்சிகளுக்கிடையே வழக்கமாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறைதான். இதன் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்த மஇகா தயாராக இருக்கிறது. ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கை குறைத்துக் கொள்ளப்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தேசிய முன்னணியின் கட்சிகளுக்கிடையே நிலவும் புரிந்துணர்வு, அரசியல் நட்பு அடிப்படையில் தொகுதிப் பரிமாற்றங்களை சுமுகமாக மேற்கொள்ள முடியும்” என்றும் டாக்டர் சுப்ரா மேலும் தெரிவித்தார்.

mic-cwc-06102017 (3)
மஇகா மத்திய செயலவைக்குப் பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ராவுடன், அ.சக்திவேல், ஜஸ்பால் சிங்…