Home இந்தியா இரட்டை இலைக்கான விசாரணை – அக்டோபர் 13 நடைபெறும்!

இரட்டை இலைக்கான விசாரணை – அக்டோபர் 13 நடைபெறும்!

1270
0
SHARE
Ad

aiadmk-flagபுதுடில்லி – அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சிக் கொடி எந்தத் தரப்புக்கு வழங்கப்பட வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் விசாரணை, நேற்று நடத்தப்பட்டு, இருதரப்பு வாதங்களும் செவிமெடுக்கப் பட்ட பின்னர், எதிர்வரும் அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்றைய விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பினர் புதுடில்லியில் உள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. இந்த முடிவைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது விசாரணையைத் தொடர்ந்தது.

நேற்றைய தேர்தல் ஆணைய விசாரணையின் போதும் தினகரன் தரப்பினர், கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க 4 மாத கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு, எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர் செல்வம் இணைந்து சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்றும் புகார் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இருப்பினும் தினகரன் கோரிக்கைக்கு இணங்க மறுத்த தேர்தல் ஆணையம் தொடர்ந்து, விசாரணையை நடத்தி, தனது விசாரணையை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

admk-logo