Home நாடு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம் – கொலையா? தற்கொலையா?

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம் – கொலையா? தற்கொலையா?

1528
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – ஜோகூர் பாருவைச் சேர்ந்த ஸ்கூடாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்து நிலையில் காணப்பட்டனர்.

இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் ஜோகூர் பாரு காவல்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

மதுபானங்கள் மொத்த விற்பனையாளரான பூபாளன் ரத்னம் (வயது 53) அந்த வீட்டின் அறை ஒன்றில் இருந்த மின்விசிறியில் துணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அவரது மனைவி ஜெயா பிச்சைமுத்து (வயது 46) வீட்டில் வரவேற்பைறையிலும், இவர்களின் 14 வயது மகன் ஷர்வீன் பூபாளனும், 9 வயது மகள் கிருஷா பிரிடீனாவும் மற்றொரு படுக்கை அறையில் இறந்த நிலையில் கிடந்தனர்.

அவர்களின் கழுத்தில் நெறித்தற்கான காயம் இருந்ததாக காவல்துறை கூறியிருக்கிறது.

அதேவேளையில் பூபாளன் எழுதியதாக நம்பப்படும் கடிதம் ஒன்றும் அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட காவல்துறைத் தலைமைத் துணை ஆணையர் நூர் ஹாஷிம் முகமது கூறியிருக்கிறார்.

படம்: கோப்புப் படம்