வழக்கமாக தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளின் தேசியப் பேராளர் மாநாடுகளில் கலந்து கொள்ளும் பிரதமர் நாளை தேசிய முன்னணியின் ஆதரவு கட்சியான ஐபிஎப் கட்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அண்மையில், ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தனுக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டதன் மூலம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐபிஎப் கட்சியின் ஆதரவையும், பங்களிப்பையும் தேசிய முன்னணி குறிவைத்துள்ளது தெளிவாகியுள்ளது.
நாளை செர்டாங் விவசாயக் கண்காட்சி மண்டபத்தில் (மெப்ஸ்) நடைபெறும் ஐபிஎப் கட்சியின் மாநாட்டில் தேசிய முன்னணியின் மற்ற உறுப்பியக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.