Home நாடு ஐபிஎப் மாநாட்டில் பிரதமர்

ஐபிஎப் மாநாட்டில் பிரதமர்

910
0
SHARE
Ad

Malaysia's Prime Minister Najib Razak waves as he arrives at Naypyitaw international airport to attend 24th ASEAN Summitசெர்டாங் – நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கும் ஐபிஎப் (மலேசிய இந்தியர் முன்னேற்ற முன்னணி) கட்சியின் 25-வது ஆண்டுப் பேராளர் மாநாட்டில் பிரதமரும், தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து சிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளின் தேசியப் பேராளர் மாநாடுகளில் கலந்து கொள்ளும் பிரதமர் நாளை தேசிய முன்னணியின் ஆதரவு கட்சியான ஐபிஎப் கட்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அண்மையில், ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தனுக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டதன் மூலம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐபிஎப் கட்சியின் ஆதரவையும், பங்களிப்பையும் தேசிய முன்னணி குறிவைத்துள்ளது தெளிவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

நாளை செர்டாங் விவசாயக் கண்காட்சி மண்டபத்தில் (மெப்ஸ்) நடைபெறும் ஐபிஎப் கட்சியின் மாநாட்டில் தேசிய முன்னணியின் மற்ற உறுப்பியக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.