Home இந்தியா மதுரை ஆதீனம் மடத்துக்குள் நித்யானந்தா நுழையத் தடை!

மதுரை ஆதீனம் மடத்துக்குள் நித்யானந்தா நுழையத் தடை!

1080
0
SHARE
Ad

Nithiyanandaமதுரை – மதுரை ஆதீனத்தின் மடத்திற்குள் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா 4 வாரங்களுக்கு நுழைய இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும் இது குறித்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆதின மடத்தையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்ற நித்யானந்தா திட்டம் போடுகிறார் என்று கூறி மதுரையை சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை விடுத்திருக்கிறது.

Comments