Home வணிகம்/தொழில் நுட்பம் இணைய வணிகம்: அமேசோனுடன் மோதும் வால் மார்ட்!

இணைய வணிகம்: அமேசோனுடன் மோதும் வால் மார்ட்!

1644
0
SHARE
Ad

walmart-நியூயார்க் – இணையம் வழியான வணிகத்தில் உலகில் முதன்மை வகிக்கும் நிறுவனமான அமேசோன் நிறுவனத்திற்குக் கடும் போட்டியை வழங்கும் நோக்கில் தனது இணைய வணிகத்தில் வால் மார்ட் நிறுவனம் மேலும் கூடுதலான கவனம் செலுத்தவிருக்கிறது.

இதன்வழி தனது இணைய வணிகத்தை மேலும் 40 சதவீதத்துக்கு அதிகரிக்க வால் மார்ட் நோக்கம் கொண்டுள்ளது. தற்போது பாரம்பரியமான பெரும் அங்காடி வணிக வளாகங்களை அமைத்து வணிகத்தில் ஈடுபட்டு வரும் வால் மார்ட் அடுத்த ஆண்டில் மேலும் 1,000 இணையம் வழி விற்பனை முகப்பிடங்களை அமைக்கவிருக்கின்றது. தற்போது உள்ள எண்ணிக்கையை விட இது இருமடங்கு அதிகமாகும்.

walmart.com என்ற இணைய முகவரியிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு அமைக்கப்படும் இந்த இணைய வணிக முகப்பிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு பாரங்கள் பூர்த்தி செய்வதற்கு உதவிகள் வழங்கப்படும்.

#TamilSchoolmychoice

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தனது விற்பனை வருமானத்தை மேலும் 3 சதவீதம் அதிகரிக்க வால் மார்ட் எண்ணம் கொண்டுள்ளது.

மலேசியாவில் வால் மார்ட் கிளைகள் எதுவும் தற்போது இயங்கவில்லை. எனினும் இந்தியாவில் பெரிய அளவில் விற்பனை முகப்பிடங்களைத் தொடங்க வால் மார்ட் திட்டமிட்டுள்ளது.