Home நாடு நஜிப்புக்கு எதிரான டோனி புவா வழக்கு நிராகரிப்பு!

நஜிப்புக்கு எதிரான டோனி புவா வழக்கு நிராகரிப்பு!

858
0
SHARE
Ad

Malaysia's Prime Minister Najib Razak waves as he arrives at Naypyitaw international airport to attend 24th ASEAN Summitகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா தொடுத்த அரசு அலுவலக துஷ்பிரயோக வழக்கை விசாரணை செய்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

நஜிப்பிடம் பிரதமர் துறை அமைச்சும், நிதியமைச்சும் இருந்தாலும் கூட, அவர் ஒரு அரசு அதிகாரி இல்லை என்று, நீதித்துறை ஆணையர் ஃபைசா ஜமாலுதின் தீர்ப்பு வழங்கினார்.

எனவே, 1எம்டிபி தொடர்பாக நஜிப், மலேசிய அரசுக்கு எதிராக டோனி புவா எந்த ஒரு சட்ட வழக்கும் போட முடியாது என ஃபைசா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.