Home உலகம் கட்டலோனியா தனிநாடாக ஸ்பெயினிலிருந்து பிரிந்தது

கட்டலோனியா தனிநாடாக ஸ்பெயினிலிருந்து பிரிந்தது

943
0
SHARE
Ad

Spain-catalonia-mapபார்சிலோனா – ஸ்பெயின் நாட்டிலிருந்து கட்டலோனியா மாநிலம் தனி சுதந்திர நாடாகப் பிரிவதற்கு ஆதரவாக அம்மாநிலத்தின் நாடாளுமன்றம் இன்று வாக்களித்தது.

எனினும் ஸ்பெயின் அரசாங்கம் கட்டலோனியா தனி நாடாகப் பிரிவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. மாறாக, கூடுதல் அதிகாரங்களுடன் அம்மாநிலத்தில் நேரடி ஆட்சியை அமுல்படுத்த ஸ்பெயின் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் காரணமாக, அண்மையக் காலம் வரை வரலாறு காணாத விதமாக, ஐரோப்பிய மண்டலத்தில் அரசியல் பொருளாதார மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஸ்பெயின் நாட்டின் புகழ் பெற்ற நகரான பார்சிலோனாவை மையமாகக் கொண்ட மாநிலம் கட்டலோனியா ஆகும்.

இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வாக்களிப்பில் கட்டோலோனியா தனிநாடாகப் பிரிவதற்கு 70 வாக்குகள் கிடைத்த வேளையில் எதிர்த்து 10 வாக்குகள் விழுந்தன.