கோலாலம்பூர் – வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசிய ஆசிரியர், வேறு பணிக்கு மாற்றப்பட்டிருப்பதாக துணைக் கல்வியமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்திருக்கிறார்.
பெஸ்தாரி ஜெயாவில் உள்ள தமிழ்ப் பள்ளியில் இருந்து அவர் மாவட்ட கல்வி இலாகாவில் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் கமலநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.
“உடனடியாக இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் படி மாநிலக் கல்வி இலாகாவிற்கு உத்தரவிட்டிருக்கிறேன். அந்த ஆசிரியரின் நடத்தையை அறிந்து மிகுந்த அதிருப்தியும், அறுவெறுப்பும் அடைந்தேன். இது போன்ற நடத்தையும், வெறுக்கத்தக்க நடவடிக்கையும் கொண்ட யாரையும் எந்தக் காரணத்திற்காகவும் மன்னிக்க முடியாது. குறிப்பாக ஆசிரியர் பணியில் இருப்பவர்கள். எனவே தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று கமலநாதன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.