Home Photo News சல்மான் கதாநாயகியாகும் ‘நாகின்’ மவுனி ராய்!

சல்மான் கதாநாயகியாகும் ‘நாகின்’ மவுனி ராய்!

1360
0
SHARE
Ad

mouni=roy-instagram-photonews (3)மும்பை – வட இந்தியா முழுவதும் மக்களை வசீகரித்திருக்கும் பிரபலமான தொலைக்காட்சித் தொடர் நாகின் (பாம்பு). நமது நாட்டின் அஸ்ட்ரோவின் 108 தாரா எச்டி அலைவரிசையிலும் இந்தத் தொடர் ஒளியேறி வருகிறது.

மனித உருக் கொள்ளும் பாம்பு ஒன்றின் கதையான இந்தத் தொடரின் கதாநாயகி மவுனி ராய். கவர்ச்சிகரமான உடலமைப்போடும் வித்தியாசமான, தீட்சண்யமான விழிகளும் கொண்ட மவுனி ராய் விரைவிலேயே இந்தியா முழுமைக்கும் பிரபலமான நட்சத்திரமாகிவிட்டார்.

mouni-roy-salman-khanஇவரது திறமையையும், அழகையும் பார்த்த சல்மான் கான் தனது அடுத்த படத்தில் இவரைப் பிடித்து கதாநாயகியாகப் போட்டுவிட, அந்தப் படத்தைக் காண இப்போது காத்துக் கிடக்கிறது இந்திப் படவுலகம்.

#TamilSchoolmychoice

சல்மான் கான் மவுனி ராயைத் தனது வீட்டிற்கும் அழைத்து விருந்து கொடுத்து, வீட்டைச் சுற்றிக் காண்பித்து கௌரவப்படுத்தியிருக்கிறார். அதற்குப் பதிலாக சல்மானின் பிக்பாஸ் தொலைக்காட்சித் தொடர் அரங்கத்திற்கு வருகை தந்தார் மவுனி ராய்.

mouni=roy-instagram-photonews (1)மவுனி ராயின் இன்ஸ்டாகிராம் பக்கம் இரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அம்மணி, போட்டுத் தாக்கும் அளவுக்கு, இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள்தான் அதற்குக் காரணம். மவுனி ராயின் இன்ஸ்டாகிராம் படங்களில் சில இதோ உங்களின் பார்வைக்கு:

mouni=roy-instagram-photonews (2)mouni=roy-instagram-photonews (4)mouni=roy-instagram-photonews (5)mouni=roy-instagram-photonews (6)mouni=roy-instagram-photonews (7)mouni=roy-instagram-photonews (8)