Home கலை உலகம் மின்னலின் மண்ணின் நட்சத்திரப் போட்டி – வாரம் 200 ரிங்கிட் பரிசு!

மின்னலின் மண்ணின் நட்சத்திரப் போட்டி – வாரம் 200 ரிங்கிட் பரிசு!

936
0
SHARE
Ad

Minnalcontestகோலாலம்பூர் – ஒவ்வொரு வாரமும் மின்னலின் சனிக்கிழமை காலை மணி 11 தொடக்கம் 1 மணி வரை மின்னலின் மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சி ஒலியேறி வருகிறது.

Minnalமண்ணின் மைந்தர்களின் பாடல்கள், கலைஞர்கள் படைப்புகள், சந்திப்புகள் என பல சிறப்பு அம்சங்கள் நிகழ்ச்சியில் இடம்பெறும். இந்த வாரம், 30 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் இருக்கும் எஸ்.டி பாலாவின் நூல் வெளியீட்டு விழா குறித்த சந்திப்பு, மதன் இயக்கத்தில் ‘வாய்ப்பு’ எனும் குறும்படத்தின் பாடல் வெளீயிடு, ‘தோட்டம்’ திரைப்பட வெளீயிடு குறித்த சந்திப்பு, ‘ஆசான்’ திரைப்படம் குறித்த சுவாரசியமான புவனேந்திரனின் சந்திப்பும் நிகழ்ச்சியில் ஒலியேறும். அதே வேளையில், உள்ளுர் பாடல்களின் சிறந்த பத்து பாடல்களை அறிவிப்பாளர் ரவின் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவார்.

Vaaippuஇளைஞர்களை கவரும் வகையில் மின்னலின் மண்ணின் நட்சத்திர (dubsmash / musically) போட்டி இரண்டவது வாரமாக இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் போட்டில் தர்ஷிணி ராஜு வெற்றி பெற்றார். இந்த வாரம் 200 ரிங்கிட் யார் வெற்றி பெறுவார் என்பது மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சியின் முடிவில் தெரிய வரும்.

#TamilSchoolmychoice

உள்ளுர் கலைஞர்களின் பாடல்கள் அல்லது மலேசிய திரைப்படத்தின் காட்சிகளை கொண்டு (dubsmash / musically) காணொளி 1 நிமிடத்திற்குள் செய்ய வேண்டும். இப்போட்டி இளைஞர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வாரம் இப்போட்டியில், ஜீவன் அங்கமுத்து, நேசலினி, டயனா, தமிழ் அரசன், லோக, டேவிட், அஸ்வின், ஷானயா, தனுஷ், மவித்தரன் கிருஷ்ணன், ஜெசி, குணாளன், ஷாமினி, யோதினி, நரேந்திரன், நதியா, ஹேமா, புவனேஷ், மினிதா, திவ்யா ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் யார் வெல்ல போகிறார் என்பது நேயர்களின் கைகளில் இருக்கிறது. காரணம், இப்போட்டிக்கு நேயர்கள் தான் நீதிபதி.

RavinPremaStbalaநேயர்கள் காணொளியை மின்னலின் பேஸ்புக் உள்பெட்டிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட காணொளியை மின்னல் எப்எம் பேஸ்புக்கில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்யப்படும். பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், எந்த காணொளிக்கு அதிகம் விருப்பம் வருதுதோ, அது தான் அந்த வாரம் வெற்றி பெறும் காணொளி. தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளரின் பெயர் மின்னலின் மண்ணின் நட்சத்திரத்தில் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சனிக்கிழமை காலை மணி 11 தொடக்கம் பிற்பகல் 1 மணிக்குள் அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற நேயரின் சந்திப்பு இடம்பெறும். ஆக நேயர்கள் இப்போட்டியில் கலந்துக் கொண்டு பரிசை பெறலாம்.

நேயர்கள் செய்யக்கூடிய காணொளி வித்தியாசமாக புதுமையாக அவர்களின் கற்பனைக்கு ஏற்றது போல செய்து அனுப்பது சிறப்பு. காணொளியை அனுப்பும் போது, மறவாமல் நேயர்களின் பெயர், அடையாள அட்டை எண், தொலைப்பேசி எண்களையும் அனுப்ப வேண்டும். இந்த போட்டியை குறித்த மேல் விவரங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், மண்ணின் நட்சத்திர தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனை 03-22887793 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.