கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் மௌண்ட் அகுங் எரிமலை வெடித்துக் கொண்டிருப்பதால், பாலி, லொம்பாக் ஆகிய நகரங்களில் அமைந்திருக்கும் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து இன்று திங்கட்கிழமை சாங்கி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டிருக்கும் தகவலில், “மௌண்ட் அகுங் எரிமலை வெடிப்பு காரணமாக, பாலி, லொம்பாக் விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அடுத்த அறிவிப்புகள் வரும் வரை அவை மூடப்பட்டிருக்கும்”
“பயணிகள் சாங்கி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான (changiairport.com)-ஐ வலம் வந்து இது குறித்த அடுத்தக்கட்டத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கின்றது.
கடந்த 1963-ம் ஆண்டு மௌண்ட் அகுங் எரிமலை வெடித்ததில், அப்பகுதியைச் சேர்ந்த 1,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.