Home உலகம் வடகொரியாவில் 4 பேருக்கு கதிர்வீச்சுத் தாக்குதல்!

வடகொரியாவில் 4 பேருக்கு கதிர்வீச்சுத் தாக்குதல்!

956
0
SHARE
Ad

சியோல் – வடகொரியாவில் கில்ஜு பகுதியில் வாழ்ந்து வரும் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 4 பேருக்கு கதிர்வீச்சு தாக்குதல் ஏற்பட்டிருப்பதை தென்கொரியா இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியிருக்கிறது.

எனினும், அவர்கள் 4 பேரும் பாதிக்கப்பட்டது பியோங்யாங்கின் அணு ஆயுதச் சோதனையால் என்பது உறுதியாகவில்லை என்றும் தென்கொரியா குறிப்பிட்டிருக்கிறது.

NorthKorea
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்

கில்ஜூ பகுதியில் வாழ்ந்து வரும் 30 விவசாயிகளில் அந்த 4 பேர் கண்டறியப்பட்டிருக்கின்றனர். கில்ஜூ பகுதி என்பது வடகொரியா அணு ஆயுதச் சோதனை நடத்தி வரும் புங்யே-ரி பகுதிக்கு அருகில் உள்ளது.

#TamilSchoolmychoice

அங்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் தென்கொரிய அரசு ஆய்வு நடத்தி வருகின்றது.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை வடகொரியா 6 முறை அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியிருக்கிறது. ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தலைமையிலான வடகொரிய அரசு தொடர்ந்து இது போன்ற அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.