Home இந்தியா கந்துவட்டி அன்புச்செழியனுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனையா? – ராமதாஸ் கண்டனம்!

கந்துவட்டி அன்புச்செழியனுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனையா? – ராமதாஸ் கண்டனம்!

1187
0
SHARE
Ad

panneer selvam-palanisamy-comboசென்னை – கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல காதணி விழா மதுரையில் நடைபெற்றது.

அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன், தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரான கந்துவட்டிக்காரர் அன்புச்செழியனும் கலந்து கொண்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

முதல்வர், துணை முதல்வருடன் ஒரே வரிசையில் அமர்ந்திருந்த அன்புச்செழியனுக்கு, அமைச்சர்கள் சிலரும் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்ததாக இணையதளங்களில் புகைப்படங்களும் வெளியாகியிருப்பதையும் ராமதாஸ் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மேலும், முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த அறைக்குள் செய்தியாளருக்குக் கூட அனுமதி வழங்கப்படவில்லை என்றும், ஆனால் அன்புச்செழியனுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது என்றும் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இவையெல்லாம் உண்மையானால், தேடப்படும் குற்றவாளியுடன் ஒன்றாக அமர்ந்து நட்புறவாடிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் இனியும் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டனர் என்றும் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் அன்பு செழியனின் முன்பிணை மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட அதிகாரம் இருப்பதால், அவர் ஒரு தேடப்படும் குற்றவாளியாகவே கருதப்படுகிறார் என்றும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.