Home கலை உலகம் நடிகர் சசிகுமார் மேலாளர் தற்கொலை: விஷால் அதிரடி அறிக்கை!

நடிகர் சசிகுமார் மேலாளர் தற்கொலை: விஷால் அதிரடி அறிக்கை!

1481
0
SHARE
Ad

Producer Ashokkumarsuicideசென்னை – நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி புரோடக்சன்ஸ் இணை தயாரிப்பாளருமான அசோக் குமார், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, தனது வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கிக் கொண்ட அசோக், கடன் தொல்லை காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இது குறித்து வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சசிகுமார், “எனது மேலாளராக, எனது நிழலாக இருந்தவர் அசோக். என்னுடன் இணைத் தயாரிப்பாளராகவும் இருந்தார். கடன் தொல்லை இருந்திருக்கிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியவில்லை” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சசி புகார் அளித்துவிட்டுத் திரும்பிய போது, அவருடன் இயக்குநர்கள் பாலா, கரு.பழனியப்பன், அமீர், சமுத்திரக்கனி ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதனிடையே, அசோக் குமாரை தற்கொலைக்குத் தூண்டியதாக மதுரையைச் சேர்ந்த கந்து வட்டி ஆசாமி அன்பு செழியன் என்பவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவரான நடிகர் விஷால் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன்.”
“தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர் இது போல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”
“எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம்.” என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.