Home உலகம் ஆண்டு இறுதிக்குள் வரிசையாக ஏவுகணைகளைப் பரிசோதிக்கிறது வடகொரியா!

ஆண்டு இறுதிக்குள் வரிசையாக ஏவுகணைகளைப் பரிசோதிக்கிறது வடகொரியா!

791
0
SHARE
Ad

North Korea says it has developed ballistic nuclear warheadsசியோல் – இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல தொலை தூர ஏவுகணைகளை வடகொரியா சோதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தென்கொரிய உளவுப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

தென்கொரிய நாடாளுமன்ற உளவுத்துறைக் குழுவிடம், சியோல் தேசிய உளவுப்பிரிவு கடந்த திங்கட்கிழமை இது தொடர்பான தகவலை வெளியிட்டிருக்கிறது.

செயற்கைக் கோள் அனுப்புதல், விண்வெளியில் அமைதியான வளர்ச்சி என்ற பெயரில் இந்த ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து பார்க்கலாம் என்றும், அது மறைமுகமாக அமெரிக்காவை அச்சுறுத்தி தனது பலத்தை நிரூபிக்கவே என்றும் தென்கொரிய உளவுப்பிரிவு தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கடைசியாக, கடந்த செப்டம்பர் மாதம், ஜப்பான் நாட்டின் வழியாகத் தனது தொலை தூர ஏவுகணையை, வடகொரியா பரிசோதனை செய்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.