Home நாடு அஸ்ட்ரோவில் தைப்பூசம் நேரலை: உலகளவில் இந்துக்களை பக்தியில் திளைக்கச் செய்யும் முயற்சி!

அஸ்ட்ரோவில் தைப்பூசம் நேரலை: உலகளவில் இந்துக்களை பக்தியில் திளைக்கச் செய்யும் முயற்சி!

1352
0
SHARE
Ad

Astro 6கோலாலம்பூர் – மீண்டும் உலக மக்களைப் பக்தியில் திளைக்க, “திரு அருட்பா” என்ற கருப்பொருளைத் தாங்கி அஸ்ட்ரோ வானவில், விண்மீன் எச்.டி, அஸ்ட்ரோ கோ, NJOI Now, ராகா மற்றும் அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் இவ்வாண்டு தைப்பூசம் கொண்டாட்டத்தின் சிறப்பு நேரலை ஜனவரி 30-ஆம் தேதி தொடக்கம் இடம்பெறவிருக்கிறது.

அஸ்ட்ரோ வானவில் மற்றும் அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி

ஈப்போ கல்லுமலை, பினாங்கு தண்ணீர் மலை மற்றும் சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரணிய சுவாமி ஆலயத் திருத்தலங்களின் அண்மைய நிலவரங்களின் காட்சித் தொகுப்பை அறிவிப்பாளர் மகேந்திரன் வேலுப்பிள்ளை, குமரேஷ் மற்றும் விழுதுகள் ரேவதி தொகுத்து வழங்குவார்கள். இந்நேரலையை அஸ்ட்ரோ கோ மற்றும் NJOI Now வாயிலாக காணலாம்.  பேராசிரியர் டாக்டர் ஜி. ஞானசம்பந்தரின் நேர்காணல் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

#TamilSchoolmychoice

கீழ் குறிப்பிடபட்டுள்ள நேரங்களில் தைப்பூச சிறப்பு நேரலையைக் கண்டு ரசிக்கலாம்.

30.01.2018 செவ்வாய்க்கிழமை

Astro Live 1

31.01.2018 புதன்கிழமை (தைப்பூசத் திருநாள்)

Astro Live 2

அஸ்ட்ரோ உலகம்  

உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாக்களை இரசிகர்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், இணையம் வழி இடைவிடாது ஒளிபரப்ப வழங்கி கின்னஸ் உலக சாதனை விருதை பெற்ற அஸ்ட்ரோ உலகம் இவ்வாண்டு தங்களுடைய ரசிகர்களுக்காக 24 மணி நேர இணைய நேரலை ஒளிபரப்பை 5 முக்கிய திருத்தலங்களிலிருந்து வழங்கவிருக்கின்றது.

ஜனவரி 30-ஆம் தேதி மாலை 5.00 தொடக்கம் ஜனவரி 31-ஆம் தேதி மாலை 5.00 மணி வரை ஈப்போ கல்லுமலை, பினாங்கு தண்ணீர் மலை, சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரணிய சுவாமி, கூலா சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம் மற்றும் ஜொகூர் தண்டாயுதபாணி ஆலயங்களில் நடைபெறும் தைப்பூச கொண்டாட்டத்தை மலேசிய வாழ் மக்கள் மட்டுமல்லாது, உலகெங்கிலும் வாழும் மக்கள் அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தின் வாயிலாகக் கண்டு களிக்கலாம்.

இந்நிகழ்ச்சியை அறிவிப்பாளர் பாலகணபதி, நதியா, குணாசீலன், அருணா, அகிலா, ரேவதி, சுஸ்மிதா, ரத்னா மற்றும் பேசு தமிழா பேசு வெற்றியாளர் நித்யா ஆகியோர் தொகுத்து வழங்கிவார்கள்.

Astro 5அதை வேளையில், தைப்பூச கொண்டாட்டத்தைக் குறித்த தகவல்கள் மற்றும் நிலவரங்களை அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மைக்ரோசைட் (microsite) வாயிலாக அவ்வப்போது பெற்று கொள்ளலாம்.

இந்த இடைவிடாத நேரடி ஒளிப்பரப்பில் பாடகர் டி.எல் மகாராஜனின் சிறப்பு நேர்காணலும், பழனி, வடபழனி மற்றும் திருச்சிராப்பள்ளி இடங்களில் நடைபெறும் தைப்பூச கொண்டாட்டமும் இடம்பெறும்.

அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் இவ்வாண்டு தைப்பூச கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் காண்பதற்கு  ஹேஷ்டேக்  “VelVelVetrivel” பயன்படுத்தலாம். ரசிகர்கள் தங்களுடைய தைப்பூச கொண்ட்டாடத்தின் புகைப்படங்களை #VelVelVetrivel பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் (Facebook, Instagram, Twitter) பதிவேற்றம் செய்யலாம்.

மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my/ அகப்பக்கத்தை வலம் வருங்கள்.

ராகா

ஜனவரி 30 மற்றும் 31-ஆம் தேதி பத்துமலைத் திருத்தலத்திலிருந்து  ராகா அறிவிப்பாளர்களின் சிறப்பு நேரடி வெளி ஒலிபரப்பு இடம்பெறும். அதுமட்டுமின்றி, ஜனவரி 30-ஆம் தேதி இரவு 8 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை “ராகாவின் பண்பாடு கலை விழா” நடைபெற்றவுள்ளது.

இக்கலை விழாவில் மயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், உறுமி போன்ற பாரம்பரிய கலைகளோடு ராகாவின் அறிவிப்பாளர் ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், அகிலா, கீதா, கவிமாறன், யாசினி, ஷாலு மற்றும் ஜெய் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெறும்.

அதை வேளையில், தமிழ்த் திரைப்பட நடிகர்களான  வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ், சுப்பு, சம்பத், சானா, அஞ்சேனா மற்றும் இயக்குனர் சரவண ராஜன் இக்கலை விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.

ராகாவின் ரசிகர்களுக்கு கேரளா செல்லும் விமான பட்டுச்சீட்டு தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பும் காத்துக் கொண்டிருக்கின்றது. இப்போட்டி ஜனவரி 30 (இரவு 7 முதல் நள்ளிரவு 12) மற்றும் ஜனவரி 31 (காலை 6 முதல் இரவு 8) மட்டுமே நடைபெறும்.

நட்பு ஊடகங்கள்:

அஸ்ட்ரோ உலகம்:

Astro Live 3

ராகா:

Astro live 4