பக்காத்தானின் தேர்தல் அறிக்கை: ஜிஎஸ்டி இரத்து; முதல் காருக்கு வரியில்லை; டோல் கட்டணம் நீக்கம்!

    985
    0
    SHARE
    Ad

    ஷா ஆலாம் – இன்று வியாழக்கிழமை இரவு பக்காத்தான் கூட்டணி தனது 138 பக்க தேர்தல் அறிக்கையை துன் மகாதீர் தலைமையில் வெளியிட்டது.

    அந்த அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    • உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்த பக்காத்தான் வியூகங்கள் வகுத்துள்ளது.
    • அடிக்கடி அறிவித்தபடி ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு, சேவை வரி முற்றாக அகற்றப்படும் என தேர்தல் அறிக்கை குறிப்பிடுகின்றது.
    • முதல் கார் வாங்குபவர்களுக்கு அந்தக் கார் மீதான வரி அகற்றப்படும். 1600 சிசி கொள்ளளவு கொண்ட கார்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். 8,000 ரிங்கிட்டுக்கும் குறைவான சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.
    • சில பிரிவினருக்கு பெட்ரோல் மீதான மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். 125 சிசி குறைவான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,300 சிசிக்கு குறைவான கார்களுக்கு பெட்ரோல் உதவித் தொகையில் முன்னுரிமை வழங்கப்படும்.
    • பொதுப் போக்குவரத்துச் செலவினங்களில் உதவுவதற்காக 100 ரிங்கிட் சிறப்புக் கட்டண அட்டைகள் வழங்கப்படும்.
    • நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் டோல் கட்டணம் எனப்படும் சாலை சுங்கச்சாவடி கட்டணங்கள் கட்டம் கட்டமாக அகற்றப்படும்.
    • பி-40 எனப்படும் குறைந்த வருமானமுடைய பிரிவினருக்கு உதவுவதற்காக ஓராண்டுக்கான 500 ரிங்கிட் பெறுமானமுள்ள சிறப்புச் சலுகை அட்டை வழங்கப்படும்.
    • 4 ஆயிரம் ரிங்கிட் சம்பளத்தை எட்டியவுடன்தான் ஒருவர் தனது பிடிபிடிஎன் கட்டணத்தைத் திரும்பச் செலுத்தும் வகையில் திருத்தங்கள் செய்யப்படும்.
    • தங்களின் ஊழியர்களின் பிடிபிடிஎன் கடன்களைச் செலுத்து முன்வரும் நிறுவனங்களுக்கு சிறப்பு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
    • குறைந்த பட்ச சம்பளம் 1,500 ரிங்கிட்டாக நிர்ணயம்.
    • கணவன்மார்கள் தங்களின் மனைவிக்காக தங்களின் சம்பளத்தில் இருந்து 2 விழுக்காட்டை இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதியில் செலுத்தலாம். அவ்வாறு செலுத்தினால் அரசாங்கம் கூடுதலாக, தனது பங்காக 50 ரிங்கிட்டை அந்த மனைவியின் ஊழியர் சேமநிதி வாரியக்க் கணக்கில் சேர்க்கும்.