Home இந்தியா பழனி நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சியா?- விசாரணை தொடங்கியது!

பழனி நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சியா?- விசாரணை தொடங்கியது!

1071
0
SHARE
Ad

பழனி – முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயத்தில், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான போகர் சித்தரால் நிறுவப்பட்ட நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சி நடந்திருக்கிறதா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை துவங்கியிருக்கிறது.

கருவறையில் இருந்த நவபாஷாண சிலை சேதமடைந்ததால், கடந்த 2004-ம் ஆண்டு, அபிஷேகம் செய்வதற்கென்று தனியாக ஐம்பொன்னால் ஆன மூலவர் சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில், அச்சிலையை வடிவமைக்கக் கொடுக்கப்பட்ட தங்கத்தை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்றும், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் எழுந்த புகார்களின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

அவ்விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருப்பதாகத் தெரிகின்றது. புதிய சிலை நிறுவப்பட்ட பிறகு, பல்லாயிரம் கோடி ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சி நடந்திருப்பதாகச் சந்தேகம் எழுந்திருக்கிறது.

அதன் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் இன்று வியாழக்கிழமை காலை பழனி வந்தடைந்தார். அவருடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கருணாகரன் மற்றும் குழுவினரும் வந்திருக்கின்றனர்.

தற்போது, ஐம்பொன் சிலை நிறுவப்பட்டது தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்து வரும் அக்குழுவினர், ஆலயத்தின் இணை ஆணையர் செல்வராஜிடம் விசாரணை நடத்தினர்.