Home நாடு ஹராப்பான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு!

ஹராப்பான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு!

1061
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள், 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என கூறப்படுகின்றது.

இது குறித்து, ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் வரும் செவ்வாய்க்கிழமை, கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், தன் மீது ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அடுத்த வாரம் நடைபெறும் தலைமைத்துவக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், பொதுத்தேர்தலில் ஜசெக தனது சொந்த சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் லிம் குவான் எங் கூறியிருப்பதாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.