Home தேர்தல்-14 சுங்கை பெசார்: துணைப் பிரதமரின் முன்னாள் அதிகாரி பக்காத்தான் வேட்பாளராகப் போட்டி

சுங்கை பெசார்: துணைப் பிரதமரின் முன்னாள் அதிகாரி பக்காத்தான் வேட்பாளராகப் போட்டி

840
0
SHARE
Ad

சுங்கை பெசார் – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுங்கை பெசார் நாடாளுமன்றத்தில் போட்டியிடவிருந்த பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் முகமட் அஷ்ரப் பாஹ்ரி இறுதி நேரத்தில் விலகிக் கொண்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியின் வேட்பாளராக முஸ்லிமின் யாஹ்யா பக்காத்தான் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

முஸ்லிமின் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடியின் அலுவலகத்தின் முன்னாள் அதிகாரி ஆவார். சாஹிட்டின் அரசியல் செயலாளரிடம் முஸ்லிமின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறார்.

அம்னோ உறுப்பினரான இவர் பெர்சாத்து கட்சியில் இறுதி நேரத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு சுங்கை பெசார் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதிதான் முஸ்லிமின் பெர்சாத்து கட்சியின் உறுப்பினராக இணைந்தார்.

#TamilSchoolmychoice

சுங்கை பெசார் தொகுதி பெர்சாத்து கட்சியின் தலைவரும், பக்காத்தான் கூட்டணியின் தலைவருமான ஹஸ்னிசாம் அடாம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாக மலேசியாகினி இணைய ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

சுங்கை பெசார் நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் புடிமான் முகமட் சோஹ்டி மற்றும் பாஸ் கட்சி வேட்பாளர் முகமட் சாலே முகமட் ஹூசின் ஆகியோரை எதிர்த்து முஸ்லிமின் போட்டியில் குதிக்கிறார்.