Home தேர்தல்-14 போர்ட்டிக்சன் நாடாளுமன்ற பிகேஆர் வேட்பாளர் இறுதி நேர மாற்றம்!

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற பிகேஆர் வேட்பாளர் இறுதி நேர மாற்றம்!

1210
0
SHARE
Ad
போர்ட்டிக்சன் கடற்கரை

போர்ட்டிக்சன் – மஇகா போட்டியிடவிருக்கும் போர்ட்டிக்சன் (முன்பு தெலுக் கெமாங்) நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் வேட்பாளர் ரோஸ்மான் ஜோனெட் இறுதி நேரத்தில் மாற்றப்பட்டிருக்கிறார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போர்ட்டிக்சன் மட்டுமே பிகேஆர் போட்டியிடும் ஒரே தொகுதியாகும்.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் லிங்கி சட்டமன்றத்திற்குப் போட்டியிட்ட ரோஸ்மான் அதன் தொடர்பிலான தேர்தல் செலவினங்கள் குறித்த கணக்கறிக்கையை இன்னும் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கவில்லை என்பதால், அவர் மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

லிங்கி சட்டமன்றம் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத்தின் கீழ்வரும் 5 சட்டமன்றங்களில் ஒன்றாகும்.

இறுதி நேரத்தில் இந்த குளறுபடி கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக, தற்போது பிகேஆர் கட்சி தனது புதிய வேட்பாளரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இன்னும் அந்த வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

போர்ட்டிக்சனில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோ வி.எஸ்.மோகன் போட்டியிடுகிறார்.