மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான பகாங் மாநிலத்தின் கேமரன் மலை தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
மஇகா வேட்பாளராக, தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன், பக்காத்தான் வேட்பாளராக ஜசெகவின் மனோகரன் மாரிமுத்து, ஆகியோர் இங்கே போட்டியிடுகின்றனர்.
இவர்களைத் தவிர, பாஸ் கட்சியின் சார்பில் வான் மஹாடிர் பின் வான் மாஹ்முட், பெர்ஜாசா கட்சியின் சார்பில் முகமட் தாஹிர் பின் ஹாஜி காசிம் மற்றும் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்) சார்பில் சுரேஷ் குமார் பாலசுப்பிரமணியம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
NAMA PADA KERTAS UNDI | PARTI |
MANOGARAN MARIMUTHU | PKR |
WAN MAHADIR BIN WAN MAHMUD | PAS |
SIVARAJ A/L CHANDRAN | BN |
MOHD TAHIR BIN HAJI KASSIM | BERJASA |
SURESH KUMAR A/L BALASUBRAMANIAM | PSM |
ஐந்து முனைப் போட்டியால் இங்கு வாக்குகள் பிளவுபடும் என்பதால், இறுதி முடிவு எப்படியிருக்கும் என்ற பரபரப்பு கேமரன் மலையில் ஏற்பட்டுள்ளதாக கேமரன் மலை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.