Home தேர்தல்-14 “இந்தியர்களின் இறுதிச் சடங்குகளுக்கு நிதி” – டான்ஸ்ரீ குமரனும் சாடினார்!

“இந்தியர்களின் இறுதிச் சடங்குகளுக்கு நிதி” – டான்ஸ்ரீ குமரனும் சாடினார்!

1246
0
SHARE
Ad
டான்ஸ்ரீ க.குமரன்

கோலாலம்பூர் – “பாகான் டத்தோ தொகுதியிலுள்ள இந்தியர்களின் இறுதிச் சடங்குகளுக்கான செலவினங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்” என பாகான் டத்தோ தொகுதியில் போட்டியிடும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி நாடு முழுவதிலும் இந்திய சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாஹிட் சார்பில் டத்தோஸ்ரீ இரமேஷ் என்பவர் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பலரும் கண்டனம் தெரிவித்துள்ள வேளையில், மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ க.குமரன் இத்தகைய அறிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

“பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்தாங் மெலிந்தாங் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்பை இழந்து துக்க நிலையில் இருக்கிற தொகுதி இந்தியர்களை அவமானப்படுத்தும் வகையில் டத்தோஸ்ரீ ரமேஷ் என்ற நபரின் அறிக்கை அமைந்துள்ளது. 60 ஆண்டுகளாக தேசிய முன்னணி கூட்டணி ஆட்சியில் வாழும் பாகான் டத்தோ இந்தியர்கள் தங்கள் குடும்ப இறப்பு நிகழ்ச்சிகளை நடத்தமுடியாத வறுமைக் கோட்டிற்கு கீழாகவா –  கேடுகெட்டா – வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?” என குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலவச சவப்பெட்டி விவகாரத்தால் தேசிய முன்னணிக்கு எதிரான அலை

“சமய நம்பிக்கை உள்ளவர்களுக்கு பிறப்பும் இறப்பும் ஒருவரின் வாழ்வில் எவ்வளவு முக்கிய நிகழ்ச்சி என்பதை இந்நபர் அறிந்திருக்க மாட்டார். இந்தியர்கள் என்றால் இந்துக்கள்,கிறிஸ்த்துவர்கள், இசுலாமியர்களை உள்ளடக்கிய இனம்.தேசிய முன்னணி எவ்வளவோ நல்ல காரியங்கள செய்துள்ளது.செய்யவிருப்பதாக தேர்தல் அறிக்கை கூறுகிறது.
இறப்பும் பிறப்பும் குடும்ப விவகாரம். அதை அரசியலாக்கும்
அறியாமையை வளரவிடக்கூடாது. தொகுதி தேசிய முன்னணி வேட்பாளரை நானறிவேன்.மனித நேயம் மிக்கவர். அவருடைய கவனத்திற்கு இப்பிரச்சினையை ம.இ.கா. தலைவர்கள் கொண்டு செல்ல வேண்டும். ஊத்தான் மெலிந்தாங் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்து துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தேசிய முன்னணியை ஆதரிக்கும் இந்தியர்களிடையே மன உளைச்சலையும் பெருத்த அவமானத்தையும் இலவச சவப் பெட்டி பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது.இந்த அலை தேசிய முன்னணிக்கு எதிரான அலையாக மாறுவதை
தடுக்க முடியாது” எனக் கடுமையாகச் சாடியிருக்கிறார் டான்ஸ்ரீ குமரன்.

“ம.இ.கா மற்றும் தேசிய முன்னணி தலைவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?” என்றும் குமரன் தனது எதிர்பார்ப்பை தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.