கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் மஇகா கூட்டரசுப் பிரதேசத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக விளங்கிய டத்தோ வி.எம்.பஞ்சமூர்த்தி பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
நீண்ட காலமாக மஇகாவில் ஈடுபட்டு வந்திருக்கும் பஞ்சமூர்த்தி மஇகா செந்துல் பாசார் கிளையின் இளைஞர் பகுதித் தலைவராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி பின்னர், கிளைத் தலைவர், மஇகா கெப்போங் தொகுதித் தலைவர், மஇகா மத்திய செயலவை உறுப்பினர், ம.இ.கா கூட்டரசுப் பிரதேச மாநிலச் செயலாளர் என பல பொறுப்புகள் வகித்தார்.
மஇகாவின் பிரதிநிதியாக கோலாலம்பூர் மாநகரசபை ஆலோசனை மன்றத்திலும் உறுப்பினராக பஞ்சமூர்த்தி பணியாற்றியுள்ளார்.
NEGERI | W.P. KUALA LUMPUR |
---|---|
Parlimen | P.115 – BATU |
NAMA PADA KERTAS UNDI | PARTI |
VM PANJAMOTHY A/L MUTHUSAMY | BEBAS – GAJAH |
DOMINIC LAU HOE CHAI | BN |
PRABAKARAN A/L M PARAMESWARAN | BEBAS – KUNCI |
AZHAR BIN YAHYA | PAS |
மஇகாவில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்ட பஞ்சமூர்த்தி திடீரென சுயேச்சை வேட்பாளராக தேசிய முன்னணி வேட்பாளருக்கு எதிராக பத்து தொகுதியில் போட்டியில் இறங்கியிருப்பது மஇகா வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.