சிரம்பான், மார்ச் 28- நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் மலேசியாவில் இயல்பாக கலைந்த முதல் மாநில சட்டமன்றமாக நெகிரி செம்பிலான் மாநிலம் திழ்கிறது.
கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 36 இடங்களில் 21 இடத்தையும், ஜனநாயக செயல் கட்சி 10 இடங்களையும், பி.கே.ஆர் கட்சி 4 இடங்களையும், மற்றும் பாஸ் கட்சி ஒரு இடத்தையும் பிடித்தது.
36 உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாநிலச் சட்டமன்றம் 2008 மார்ச் 27ம் தேதி பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டு ஆட்சி செய்தது.
எனவே, நேற்று அதிகாரவபூர்வமாக கலைந்த நெகிரி செம்பிலானின் சட்ட மன்றத்தை தொடர்ந்து, தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரண்டுமே அம்மாநிலத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் கைப்பற்றிவிட மிகுந்த ஆவலோடும் நம்பிக்கையோடும் இருக்கின்றனர்.
இதனையடுத்து 60 நாட்களில் நெகிரி மாநிலத்தில் தேர்தல் நடக்க வேண்டும்.