Home கலை உலகம் ஏப்ரல் மாதத்தில் சரணடையப் போகிறேன் -சஞ்சய் தத்

ஏப்ரல் மாதத்தில் சரணடையப் போகிறேன் -சஞ்சய் தத்

572
0
SHARE
Ad

sanjay-dutt

மும்பை, மார்ச் 28- ஏப்ரல் மாதத்தில் சரணடையப் போகிறேன் என்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தண்டனையைக் குறைக்க சலுகை எதையும் கோரப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை வெடிகுண்டு வெடிப்புத் தாக்குதலில் 6 ஆண்டு தண்டனை பெற்ற சஞ்சய் தத், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 6 ஆண்டு தண்டனையை  உச்சநீதிமன்றம் 5 ஆண்டாக குறைத்தது.

ஏற்கனவே ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்த சஞ்சய் தத் இன்னும் மூன்றரை ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அவர் நான்கு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் சரணடைய உள்ளதாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.