Home தேர்தல்-14 சிலாங்கூர்: ஒரே சட்டமன்றத்தோடு பாஸ் கட்சியைத் துடைத்தொழித்த அஸ்மின் அலி

சிலாங்கூர்: ஒரே சட்டமன்றத்தோடு பாஸ் கட்சியைத் துடைத்தொழித்த அஸ்மின் அலி

869
0
SHARE
Ad

ஷா ஆலாம் – இந்த முறை சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்தோடு களமிறங்கிய தேசிய முன்னணி மீண்டும் ஒரு முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 56 சட்டமன்றத் தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே தேசிய முன்னணி வென்றிருக்கிறது.

முன்பை விட அதிகமாக மொத்தமுள்ள 56 தொகுதிகளில், 51 சட்டமன்றத் தொகுதிகளை இந்த முறை பக்காத்தான் கூட்டணி வென்றுள்ளது.

அதே சமயத்தில், சிலாங்கூர் மாநிலத்தில் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் வலிமையான தலைமைத்துவத்தின் கீழ் நிகழ்ந்திருக்கும் மற்றொரு முக்கிய மாற்றம் பாஸ் கட்சியின் ஆதிக்கம் சிலாங்கூரில் துடைத்தொழிக்கப்பட்டிருப்பதாகும்.

#TamilSchoolmychoice

கடந்த 13-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியில் இணைந்து சிலாங்கூர் சட்டமன்றத்தில் 15 சட்டமன்றத் தொகுதிகளை வென்றதோடு, சில நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றிருந்த பாஸ் கட்சி 14-வது பொதுத் தேர்தலில் ஒரே ஒரு சட்டமன்றத்தை மட்டுமே சிலாங்கூரில் வென்றிருக்கிறது.

சிலாங்கூரில் உள்ள 22 நாடாளுமன்றங்களில் ஒன்றைக் கூட பாஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை.

மொத்தமுள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளை பக்காத்தான் கூட்டணி கைப்பற்ற, 2 தொகுதிகளை மட்டுமே தேசிய முன்னணி வென்றிருக்கிறது.

தஞ்சோங் காராங் நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஓமார் வென்றார். சபாக் பெர்ணம் நாடாளுமன்றத்திலும் தேசிய முன்னணி வென்றது.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தொகுதிகள் நிலவரம்

பிகேஆர் – 51

தேசிய முன்னணி – 04

பாஸ் – 01

இதற்கிடையில் சிலாங்கூர் மந்திரி பெசார் இன்று சிலாங்கூர் சுல்தானின் அரண்மனைக்கு சென்று மாநில அரசாங்கத்தை அமைக்க அனுமதி கோரியிருக்கிறார்.