Home தேர்தல்-14 5 மணிக்கு மகாதீருடனான சந்திப்புக்கு மாமன்னர் அனுமதி!

5 மணிக்கு மகாதீருடனான சந்திப்புக்கு மாமன்னர் அனுமதி!

2080
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில், துன் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் சந்திப்பு நடத்த மாமன்னர் அனுமதியளித்துவிட்டதாக பக்கத்தான் ஹராப்பான் பொதுச்செயலாளர் சைபுடின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியைத் தோற்கடித்து குறைந்த பெரும்பான்மையில் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று காலை மகாதீர் முகமது பிரதமராகப் பதவியேற்கவிருந்த நிலையில், மாமன்னரிடமிருந்து அதற்கு அனுமதி கிடைக்காததால் தாமதமானது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து இன்று மாலை மகாதீர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த 4 தலைவர்களுடன் மாமன்னரைச் சந்திக்கிறார்.