Home தேர்தல்-14 சபா பாரிசானிலிருந்து விலகுகிறது உப்கோ – வாரிசானுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது!

சபா பாரிசானிலிருந்து விலகுகிறது உப்கோ – வாரிசானுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது!

1013
0
SHARE
Ad

கோத்தா கினபாலு -சபா மாநிலத்தில் தேசிய முன்னணி கூட்டணியுடன் கைகோரித்து 14-வது பொதுத்தேர்தலில் 5 தொகுதிகளை வெற்றி பெற்ற உப்கோ கட்சி (United Pasokmomogun Kadazandusun Murut Organisation), தற்போது தேசிய முன்னணியின் கூட்டணியில் இருந்து விலகி, பார்ட்டி வாரிசான் சபாவுடன் இணைந்து புதிய மாநில அரசாங்கத்தை அமைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் வில்பிரட் மாடியுஸ் தாங்காவ் கூறுகையில், “கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் பாரிசானை விட்டு விலகி வாரிசானுடன் இணைந்து மாநில அரசாங்கத்தை அமைக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

உப்கோவுடன் இணைந்து மொத்த 29 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது தேசிய முன்னணி.

#TamilSchoolmychoice

அதேவேளையில், பிகேஆர் 2 தொகுதிகளும், வாரிசான் 21 தொகுதிகளும், ஜசெக 6 தொகுதிகளும், பார்ட்டி சோலிடரிட்டி 2 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில், உப்கோ 5 தொகுதிகளுடன் வாரிசானில் இணைவதால், வாரிசான் அதிக பெரும்பான்மை பெற்று சபாவில் அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.