கோலாலம்பூர் – துன் மகாதீர் நேற்று வியாழக்கிழமை காலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டி இன்று மாலைக்குள் அரசாங்கத்தை அமைத்தாக வேண்டும், என்று அறைகூவல் விடுத்தவுடனேயே நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது.
மாலை 5.00 மணிக்கு மகாதீர் பதவியேற்பார் என செய்திகள் பரவத் தொடங்க, கோலாலம்பூரிலுள்ள அரண்மனையின் முன் மகாதீரை வரவேற்க பொதுமக்கள் திரளத் தொடங்கினர்.
பிகேஆர் கட்சிக் கொடிகளுடன் திரளான மக்கள் நாட்டின் 7-வது பிரதமராக மகாதீரை வரவேற்க உற்சாகத்துடன் அரண்மனையில் கூடியிருந்தனர்.
கெடா சுல்தான் மட்டுமே தன் வாழ்நாளில் இரண்டுமுறை மாமன்னராக இருக்கும் பெருமையை அடைந்தார்.
இப்போது அதே கெடா மாநிலத்தைச் சேர்ந்த மகாதீரும், 15 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பிரதமராக நேற்று இரவு 9.30 மணிக்குப் பதவியேற்றார்.