கோலாலம்பூர் – (பிற்பகல் 12.30 மணி நிலவரம்)
பத்திரிக்கையாளர்களை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஷெராட்டன் தங்கும் விடுதியில் சந்தித்த துன் மகாதீர், புதிய அரசாங்கம் இன்றே அமைக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
- அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலைமை ஏற்படும்.
- இன்று மாலை 5.00 மணிக்குள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். காரணம் தற்போது பராமரிப்பு அரசாங்கம் பதவியில் இல்லை. எனவே, நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
- எனவே, பெரும்பான்மை நாடாளுமன்றங்களின் ஆதரவைத் தான் பெற்றுள்ளதாகவும், அனைவரும் இன்று காலையில் கூடி தன்னைப் பிரதமராக அங்கீகரிக்கும் கடிதங்களை வழங்கியுள்ளனர்.
- இதுவரையில் 135 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- நிறையப் பணிகள் இருப்பதால், உடனடியாக அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். இன்று மாலைக்குள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
- மாமன்னர் யாரை அழைப்பது என்று முடிவு செய்யவேண்டியதில்லை.
- பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை நிறைவேற்றியாக வேண்டும்.