Home தேர்தல்-14 நஜிப்: பத்திரிக்கையாளர்களை சந்தித்து நஜிப் உரை

நஜிப்: பத்திரிக்கையாளர்களை சந்தித்து நஜிப் உரை

1002
0
SHARE
Ad
பெர்னாமா தொலைக்காட்சி அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பான நஜிப் பத்திரிக்கையாளர் சந்திப்பு

கோலாலம்பூர் – (காலை 11.15 மணி நிலவரம்)

இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு புத்ரா உலக வாணிப மையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பல்வேறு அம்சங்கள் குறித்துக் கருத்துரைத்தார்.

அவர் உரையாற்றியபோது, அருகில் அம்னோ துணைத் தலைவர் சாஹிட் ஹமிடியும், ஹிஷாமுடின் ஹூசேன் ஓனும் உடனிருந்தனர்.

#TamilSchoolmychoice

நஜிப் ஆற்றிய உரையில் முக்கிய அம்சங்கள் சில:-

  • நாங்கள் தேசிய முன்னணி சார்பில் இதுவரையில் நிறைய செய்திருக்கிறோம்.
  • ஆனால், எதிர்க்கட்சிகள் எங்கள் மீது பல பொய்ப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.
  • நேற்று இரவு நாங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தப் போகிறோம் என்றும் அதற்காக கூட்டங்கள் நடத்தப் போவதாகவும், எதிர்க்கட்சிகள் செய்திகள் பரப்பின. எனினும் அவ்வாறு கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.
  • மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.
  • எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாததால் யாரை அடுத்த பிரதமராக ஆட்சி அமைக்க அழைப்பது என்பது குறித்து மாமன்னர் முடிவு செய்வார்.
  • மாமன்னர் தெளிவான, அறிவார்ந்த முடிவைச் செய்வார் என நம்புகிறேன்.