முந்தைய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட பிரிம் உதவித்தொகை திட்டம் தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறியிருக்கும் மகாதீர், என்றாலும் யார் உண்மையாகத் தகுதிபெற்றவர்களோ அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
மேலும், இதற்கென சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, பிரிம் உதவித் தொகை பெறுபவர்களது விவரங்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
அதேவேளையில், மலேசியாவில் சிறுபான்மையின சமூகத்தினர் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், குறிப்பாக இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
Comments