Home தேர்தல்-14 நஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்

நஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்

1292
0
SHARE
Ad
 புக்கிட் பிந்தாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் கைப்பற்றப்பட்ட பெட்டிகள்

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங் வழங்கிய பத்திரிக்கையாளர் பேட்டியில் குறிப்பிட்ட அதிகாரத்துவ தகவல்கள்:

  • கைப்பற்றப்பட்டவை மொத்தம் 72 பெட்டிகள்
  • 284 பெட்டிகள் நிறைய ஆடம்பரக் கைப்பைகள் இருந்தன.
  • நஜிப்பின் மகன் இருந்த ஒரு வீடு, மகள் இருந்த வீடு ஆகிய இல்லங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
  • சோதனை நடத்தப்பட்ட மற்றொரு வீடு காலியாக இருந்த வீடாகும். காலியாக இருந்த வீட்டில்தான் பெரும்பாலான ரொக்கமும், ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டன. இருப்பினும் இந்த இல்லத்தின் உரிமையாளர் யார் என்பதை புலன் விசாரணைக்குப் பின்னரே தெரிவிக்க முடியும் என அமார் சிங் கூறினார்.
  • கைப்பற்றப்பட்ட பெட்டிகளில் 35 பெட்டிகளில் மட்டுமே ரொக்கப் பணம் இருந்தது. அந்தப் பணம் மலேசிய ரிங்கிட் உட்பட 26 ரகத்திலான வெளிநாட்டு நாணயங்களாக இருந்தன.
  • ரொக்கப் பணத்தின் மொத்த மதிப்பு 114 மில்லியன் ரிங்கிட்டாகும். இந்த மதிப்பு நேற்று 24 மே 2018 தேதிப்படியான மதிப்பீடாகும்.
  • எஞ்சிய 37 பெட்டிகளில் விலையுயர்ந்த ஆபரணங்களும், கைக்கெடிகாரங்களும் இருந்தன. இவற்றின் மதிப்பை அறிந்து கொள்ள மதிப்பீடு செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் அதன் மதிப்பு அறிவிக்கப்படும்.
  • ரொக்கப் பணத்தை எண்ணி முடிக்க பேங்க் இஸ்லாம், மற்றும் பேங்க் நெகாராவைச் சேர்ந்த 21 அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் ரொக்கப் பணத்தை எண்ணுவதற்கும், அயல்நாட்டுப் பணத்தை மதிப்பீடு செய்யவும் பயன்படுத்தப்பட்டனர்.
  • ரொக்கப் பணத்தில் அதிகமாக சிங்கப்பூர் பணமும், மலேசிய ரிங்கிட்டும் இருந்தன.
  • ரொக்கப் பணம் பத்திரமாக பேங்க் நெகாராவில் வைக்கப்பட்டிருக்கிறது.
  • ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் புக்கிட் அமானில் வைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு உயர்நிலை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இணைந்துதான் இந்தப் பெட்டிகளை அணுகவோ, திறக்கவோ முடியும்
  • மொத்தம் 12 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.