Home நாடு சங்கப் பதிவிலாகாவுக்கு புதிய தலைமை இயக்குநர் – மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம்

சங்கப் பதிவிலாகாவுக்கு புதிய தலைமை இயக்குநர் – மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம்

971
0
SHARE
Ad
புதிய தலைமை இயக்குநர் மாஸ்யாத்தியை வரவேற்கும் சங்கப் பதிவிலாகாவின் வலைத் தளம்

புத்ரா ஜெயா – உள்துறை அமைச்சின் கீழ் வரும் சங்கப் பதிவிலாகாவின் புதிய தலைமை இயக்குநராக மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மே 23 முதல் அவரது நியமனம் அமுலுக்கு வருகிறது.

இதுநாள் வரையில் சங்கப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநராகப் பதவி வகித்து வந்த சுரியாத்தி இப்ராகிமுக்குப் பதிலாக மாஸ்யாத்தி பதவியேற்கிறார்.

#TamilSchoolmychoice

சுரியாத்தி பொதுச் சேவைத் துறை இலாகாவுக்கு கடந்த மே 22-ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளார்.

பிரிபூமி பெர்சாத்து கட்சியின் பதிவு, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பதிவு ஆகியவை மீதிலான சர்ச்சைக்குரிய முடிவுகளை சுரியாத்தி எடுத்திருந்தார்.

உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அல்வி இப்ராகிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மாஸ்யாத்தி இதற்கு முன் பொதுச் சேவைத் துறையின் உருமாற்றப் பிரிவில் உயர்நிலை ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.