கோத்தா கினபாலு – சபா தேசிய முன்னணித் தலைவர் டான்ஸ்ரீ மூசா அமான் வீட்டில், அதிரடிச் சோதனை நடத்திய மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
புதன்கிழமை மதியம் லூயாங்கில் உள்ள மூசாவின் வீட்டிற்குச் சென்ற அவர்கள் அங்கு சோதனை நடத்தி இந்த ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர்.
ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட போது மூசாவின் உறவினர்கள் யாரும் அங்கு இல்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.
எனினும், இந்தச் சோதனை மே 9 பொதுத்தேர்தலில் சபா மாநிலத்தில் வெற்றி பெற்ற மற்ற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை 20 மில்லியன் ரிங்கிட் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பானதா? என்பது உறுதியாகத் தெரியவில்லை.