Home நாடு 1 பில்லியன் ரிங்கிட் திட்டங்கள் கோலாலம்பூரில் இரத்து

1 பில்லியன் ரிங்கிட் திட்டங்கள் கோலாலம்பூரில் இரத்து

1110
0
SHARE
Ad
முகமட் அமின்

கோலாலம்பூர் – கோலாலம்பூர் மாநகரில் மேற்கொள்ளப்படவிருந்த சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 10 திட்டங்கள் இரத்து செய்யப்படுவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைவர் (டத்தோ பண்டார்) டான்ஸ்ரீ ஹாஜி முகமட் அமின் நோர்டின் பின் அப்துல் அசிஸ் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர்களின் குழுவைச் சந்தித்து விளக்கங்கள் அளித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

செலவினங்களைக் கட்டுப் படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் முகமட் அமின் தெரிவித்தார்.