Home நாடு “செவ்வாய்க்கிழமை முக்கியமான நாளாக இருக்கும்” – சித்தி ஹஸ்மா கோடி காட்டுகிறார்

“செவ்வாய்க்கிழமை முக்கியமான நாளாக இருக்கும்” – சித்தி ஹஸ்மா கோடி காட்டுகிறார்

1442
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புதிய பக்காத்தான் அரசாங்கம் பதவியேற்ற நாள்முதல் பரபரப்பு செய்திகளுக்கும் அறிவிப்புகளுக்கும் பஞ்சமே இல்லை. எல்லாமே அதிரடிகள்தான்!

ஊடகங்கள் விருப்பம்போல் பரபரப்பு செய்திகளை உற்சாகத்துடன் வெளியிட்டு வந்தாலும், குவிந்து கொண்டிருக்கும் செய்திகளில் எதற்கு முக்கியத்துவம் தருவது – எதை முதலில் தருவது என்பதில் கூட ஊடகங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை இரண்டு முக்கிய சம்பவங்கள் நடைபெறவிருக்கின்றன.

#TamilSchoolmychoice

ஒன்று முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காக வரவிருப்பது.

இரண்டாவது, அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனம் குறித்து விவாதிப்பதற்காக கூடவிருக்கும் மலாய் ஆட்சியாளர்களின் மாநாடு.

அதற்கேற்ப இன்று திங்கட்கிழமை (ஜூன் 4) மலேசியாகினி ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது பிரதமர் துன் மகாதீரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா அலி “நாளை செவ்வாய்க்கிழமை முக்கியமான நாளாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். ஆனால் என்ன காரணத்திற்காக என்பது குறித்து அவர் மேற்கொண்டு விவரிக்கவில்லை.